ADDED : செப் 20, 2024 12:13 AM
புதுச்சேரி: சென்னை ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் மருத்துவக் குழுவை சார்ந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் செல்வின் பிரபாகர், நாளை 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புதுச்சேரி, ரெயின்போ நகர் பூங்கா பின்புறம், செல்லான் நகரில், எண் 106ல் செயல்படும் காவேரி மருத்துவமனையின் தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.
இவர் எண்டோஸ்கோபி மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் நிபுணர் ஆவார்.
இவரிடம், முதுகு வலி, கால் வலி, பின் கழுத்து மற்றும் கழுத்து பிரச்னைகள், முதுகெலும்பு புற்றுநோய், முதுகெலும்பில் தொற்று, முதுகெலும்பு காசநோய், ஸ்கோலியோசிஸ் மற்றும் அனைத்து முதுகெலும்பு சம்மந்தமான குறைபாடுகளுக்கும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
இவரிடம் ஆலோசனை பெற 74189 62666, 9952524742 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யலாம்.