ADDED : பிப் 12, 2025 10:36 PM

ஊட்டி:ஊட்டி லாட்ஜில் கேரளா போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஸ் , 39, கேரளா மாநிலத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதர்ஷ் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கொல்லம் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.
அப்போது கொல்லத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அன்சி பின்னு , 35, என்பருடன் ஆதர்ஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிவிட்டது.
ஆதர்ஷ்க்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பலமுறை தனது காதலியிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ஆதர்ஸ் மற்றும் அன்சி பின்னு இருவரும் தனியாக ஊட்டி வந்து அறை எடுத்து தங்கி இருந்தனர்.
காலை காதலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அன்சி பின்னு, அங்கிருந்த பிளேடை எடுத்து தனது கையை கிழித்துக் கொண்டார்.
தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்து விட்டார். ஆதர்ஷ் அங்கிருந்த பெட்ஷீட்டை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஊட்டி பி 1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்.ஐ., சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவில் இருந்து வந்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.