தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெரியாறு அணையில் தொழில்நுட்ப ரீதியாக முழுமையான ஆய்வு: நிபுணர் குழுவுக்கு கேரளா அறிக்கை

பெரியாறு அணையில் தொழில்நுட்ப ரீதியாக முழுமையான ஆய்வு: நிபுணர் குழுவுக்கு கேரளா அறிக்கை

பெரியாறு அணையில் தொழில்நுட்ப ரீதியாக முழுமையான ஆய்வு: நிபுணர் குழுவுக்கு கேரளா அறிக்கை


ADDED : செப் 30, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 07:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் உயர்தர தொழில்நுட்ப ரீதியாக முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, மத்திய விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழுவுக்கு கேரள அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழு, செப்., 1, 2ல் தலைவர் பல்ராஜ் ஜோஷி தலைமையில் ஆய்வு மேற்கொண்டது.

அணையின் கட்டமைப்பு, உறுதித்தன்மை, கசிவுநீர், அடித்தள அழுத்தம், பாறை மற்றும் மண்ணின் நிலைத்தன்மை, அதிகபட்ச வெள்ள அளவு நீர் வெளியேற்றும் அமைப்புகள், அணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகள், வண்டல் மண் தேக்கம், நீர் தேக்க திறன், அவசர கால ஆயத்த நிலை உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு தொழில்நுட்ப அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்கு முன், மதிப்பீட்டு நிபுணர் குழுவிற்கு கேரள அரசு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த, 130 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரு சுதந்திரமான தொழில்நுட்ப ரீதியாக கடுமையான பாதுகாப்பு பரிசோதனை நடத்த வேண்டும். அணையில், 2011க்குப்பின் எவ்வித முழுமையான தொழில்நுட்ப ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

சமீபத்தில் ஐஐடி ரூர்க்கி நடத்திய ஆய்வுக்கும், மத்திய நீர்வள ஆணையத்தின் ஆய்வுக்கும் வேறுபாடுகள் உள்ளன. மேலும், வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய நீர்வள ஆணையம் செய்த மதிப்பீடுகளிலேயே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் உள்ளன.

'ரூல்கர்வ்' ஆனது ஆண்டின் வெவ்வேறு காலங்களில் நீர்த்தேக்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீர்மட்டத்தை வைத்து நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2018ல் ஏற்பட்ட வெள்ளத்தை போதுமான அளவு கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

இதனால், 'ரூல்கர்வின்' அதிகபட்சமான, 142 அடியை நிர்ணயித்தது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ரூல்கர்வின் அதிகபட்ச நீர்மட்ட அளவை குறைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us