ADDED : மார் 17, 2024 06:49 AM

தமிழகத்தில் விவசாய பணிகள், கட்டட பணிகள் உள்ளிட்ட அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களின், சிறுநீரக செயல்திறனை அறிவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பரிசோதனைக்கு வருவோரின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் புரதம் அதிகமாக உள்ளதா என்பதை உடனடியாக கண்டறியப்படுகிறது.   		அவ்வாறு இருந்தால், அடுத்தக்கட்டமாக யூரியா, கிரியாட்டினின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
கடந்த எட்டு மாதங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், 35 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை செய்ததில், 15,000 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- செல்வவிநாயகம்
பொது சுகாதாரத்துறை இயக்குனர்.

