உள்ளடக்கத்திற்கு செல்ல

கோடநாடு வழக்கில் விசாரணை குழு: 'வீ தி லீடர்ஸ்' கோரிக்கை
கோடநாடு வழக்கில் விசாரணை குழு: 'வீ தி லீடர்ஸ்' கோரிக்கை
ADDED : செப் 29, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பொதுச்செயலர் சுவாமிநாதன் அறிக்கை:
வீரமணி வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதே அணுகுமுறை, நீலகிரி மாவட்டம் கோடநாடில் நடந்த கொலை, கொள்ளை வழக்கிலும் ஏன் இருக்கக்கூடாது?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும் முழு உண்மை வெளிவரவில்லை. இதில், அதிகாரம், பணம், ஆவணங்கள், அரசியல் தொடர்புகள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அனைத்து கோணங்களிலும் விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். திட்டமிட்டவர்கள் யார் என்பதும் வெளிவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
