UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:44 PM

சென்னை: கொளத்துார் தொகுதி த.வெ.க., -– எம்.எல்.ஏ., – வி.எஸ்.பாபு, 75, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
சென்னை கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., – வி.எஸ்.பாபு, மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக, செப்., 9ம் தேதி எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்துறை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து, அவ்வப்போது பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், ‘‘கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., – வி.எஸ்.பாபு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில், அவரது உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும்,’’ என்றார்.
