ADDED : ஏப் 16, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் 19 வரை சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் ஜனவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. கடல் நடுவில் அமைந்துள்ளதாலும், உப்பு காற்றால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையிலும் இந்த பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் திறப்பு விழா முடிந்த பின், தற்போது இரண்டாவது முறையாக பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் 19- வரை பணிகள் நடைபெறும் என்றும், அதுவரை சுற்றுலா பயணியர் பாலத்தில் செல்ல முடியாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

