sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 32 கோவில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்

/

தமிழகத்தில் 32 கோவில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்

தமிழகத்தில் 32 கோவில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்

தமிழகத்தில் 32 கோவில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்


ADDED : பிப் 22, 2024 02:45 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''ஒரே நாளில் 32 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

பா.ம.க., - சதாசிவம்: மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள, மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, புதிய ராஜகோபுரம் கட்ட வேண்டும்

அமைச்சர் சேகர்பாபு: மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, விரைவில் துவக்கப்படும்.

சதாசிவம்: சேலம் மாவட்டம், கோனுார் கிராமத்தில், சென்றாய பெருமாள் கோவில் திருப்பணி முடிந்துள்ளது. கும்பாபிஷேகம் எப்போது நடக்கும்? மேட்டூர் காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: நேற்று ஒரே நாளில் மட்டும், 32 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த 33 மாதங்களில், 1,428 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

சென்றாய பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா: பாபநாசம் தொகுதியில் உள்ள, திருவலஞ்சுழி வெள்ள விநாயகர் கோவிலுக்கு, புதிய தேர் வடிவமைப்பதற்கும், சிதிலமடைந்துள்ள தேர் மண்டபத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கோவிலில், மாந்தி பூஜைக்கு பணம் கட்ட, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. அங்கு காலியாக உள்ள இடத்தில், மண்டபம் அமைத்து, சிறப்பு பூஜை செய்ய, அரசு முன்வருமா?

அமைச்சர் சேகர்பாபு; சாத்தியக்கூறுகள் இருந்தால், இந்த ஆண்டு பணி மேற்கொள்ளப்படும்.

பா.ஜ., - வானதி சீனிவாசன்: கோவையில் உள்ள பழமை வாய்ந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்ட வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், 35 கோவில்களில், ராஜகோபுரங்கள் கட்டும் பணி நடக்கிறது. நீங்கள் கேட்ட கோவிலில், ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us