உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 05, 2026 05:59 PM

அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த விஜயபாண்டியன், 37, என்பவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மூப்பக்கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயபாண்டியன்; கூலி தொழிலாளி. இவர் தன் வீட்டில், அனுமதியின்றி தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.
தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், விஜயபாண்டியன் வீட்டில் நேற்று (நவ.,4) சோதனை நடத்தினர். அப்போது, 50 மூட்டைகளில் பட்டாசுகள், வெடிப்பொருட்கள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் என, 500 கிலோ எடையிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, விஜயபாண்டியனை கைது செய்தனர்.
