பள்ளி தோழியை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி ஓட்டம்
பள்ளி தோழியை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி ஓட்டம்
UPDATED : நவ 07, 2026 08:29 PM
ADDED : நவ 07, 2026 08:26 PM
ஆரணி: ஆரணி அருகே பள்ளி தோழியை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்று தப்பிய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மேல்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பிரபு, 32. இவர், 2011ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், ஒரே பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.
இருவரும் நட்பாக பழகினர். பின்னர் பிரவுக்கு திருமணமாகிவிட்டது. இதனால், அந்த பெண் பிரபுவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால், பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு, தோழி வீட்டில் தனியாக இருந்தபோது, பிரபு அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.
மேலும், தன்னை 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, மிரட்டினார். இல்லையெனில், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை நண்பர்களின் வாட்ஸாப்பில் பதிவிடுவேன் என, மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பிரபுவை தேடி வருகின்றனர்.
