ADDED : நவ 01, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாக்காளர் சீர்திருத்த மாற்றத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த பெயரில், பீஹாரில், 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி, ஜனநாயக படுகொலை செய்த மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை கண்டிக்கிறோம். அதுபோன்ற ஜனநாயக சவாலை, தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதை எதிர்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்போம். ஜனநாயகத்தை பாதுகாக்கும், ஒரே செயல்பாடாக இருக்கும் ஓட்டுரிமையை பறிக்கும் செயலை அனுமதிக்க இயலாது. இதில், முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் எதிர்ப்பு என்பது, தேசத்தை பாதுகாப்பதற்கானது. வாக்காளர் சீர்திருத்தமா, தேசம் காக்கும் நடவடிக்கையா என வந்தால், தேசம் காக்கும் நடவடிக்கை பின்னால் செல்வோம். அதேநேரம், துாய்மை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பக்கம் நாங்கள் நின்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். - -வீரபாண்டியன், மாநில செயலர், இ.கம்யூ.,

