ADDED : நவ 01, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று மணி நேரமாக டாக்டர்கள் இல்லாததால், கடலுார் மாவட்டம், மங்களூரில் பாம்பு கடித்த விவசாயி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கிராமங்கள்தோறும் டாக்டர்கள் இருப்பதில்லை.
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் நியமனம் குறித்து, கேள்வி எழும் போதெல்லாம் ஏதோ ஒரு எண்ணிக்கையை கூறி மழுப்புவதில் மட்டுமே, சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் குறியாக இருக்கிறார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளின்றி, அப்பாவி மக்கள் மடிந்து வருகின்றனர். போதிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் இல்லாமல், சுகாதாரத்துறை செயலிழந்து கிடக்கும் வேளையில், 'உலகமே போற்றும் மருத்துவ கட்டமைப்பு' என, மேடைகளில் போலியாக பெருமிதம் கொள்ள, முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். - நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

