UPDATED : மே 05, 2025 11:10 AM
ADDED : மே 05, 2025 01:57 AM

கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இருந்தது. பின், நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியது. ஆனால், தே.மு.தி.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
அந்த கால கட்டத்தில், தே.மு.தி.க.,வுக்கு ஒரு லோக்சபா தொகுதியுடன், ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். ஆனால், உறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஆனால், அப்படி எதுவும் பேசப்படவில்லை என்பது போல், இப்போது தகவல் பரப்புகின்றனர். அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த உண்மை, தேவை வரும்போது வெளிப்படுத்தப்படும்.
எதிர்க்கட்சி என்றாலே, ஆளுங்கட்சி செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல. நல்லது செய்தால் பாராட்ட வேண்டும். அதைத்தான் விஜயகாந்த் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
- சுதீஷ்,
பொருளாளர், தே.மு.தி.க.,

