உள்ளடக்கத்திற்கு செல்ல
சபரிமலை பக்தர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் எல்.ஐ.சி., அறிமுகம்
சபரிமலை பக்தர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் எல்.ஐ.சி., அறிமுகம்
ADDED : நவ 20, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
சென்னை: சபரிமலை பக்தர்களுக்காக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் எல்.ஐ.சி., இணைந்து, முதல் முறையாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், யாத்திரையின் போது உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நேற்று (நவ.,19) எல்.ஐ.சி., நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முரளிதர் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயகுமார் ஆகியோர் இணைந்து, தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், பிராந்திய மேலாளர் ஆனந்த்குமார், செயலர் ஆனந்த், முதுநிலை கோட்ட மேலாளர் அஜீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
