கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை: தேர்தலில் போட்டியிட திட்டம்
கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை: தேர்தலில் போட்டியிட திட்டம்
UPDATED : மார் 18, 2024 12:03 PM
ADDED : மார் 18, 2024 11:09 AM

சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவதற்காக தனது கவர்னர் பதவியை இன்று (மார்ச் 18) ராஜினாமா செய்தார்.
தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20) துவங்குகிறது. இதற்காக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலில் அவர் பா.ஜ., சார்பில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தமிழகத்தின் வடசென்னை தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

