ADDED : அக் 18, 2024 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றியும் பாதுகாப்பற்ற வகையிலும் ஒரு டன் எடையுள்ள வெடி பொருட்களை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு வழி சாலையில் நேற்று போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1 டன் எடையுள்ள நாட்டு வெடிகள் இருந்தன. அவை, புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு உரிய ஆவணங்கள் இன்றி, பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினர்.
லாரி டிரைவர், புதுச்சேரி காட்டுக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்.30. என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.