ADDED : அக் 27, 2025 08:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு காலமானார். அவருக்கு வயது 102.
தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். இவரது தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
சிவசங்குவிற்கு 7 மகன்கள், 1 மகள். சினேகன் தான் கடைசி மகன் (8வது பிள்ளை). பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

