ADDED : ஆக 18, 2025 03:41 AM

மதுரை : திருச்சி மணப்பாறை அருகே பணியில் இருந்த கேட் கீப்பரை தாக்கியவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வரு கின்றனர்.
மதுரை கோட்டம் சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே லெவல் கிராசிங்கில் கேட் கீப்பராக உதயகுமார் பணியில் இருந்தார். நேற்றுமுன் தினம் இரவு 11:15 மணிக்கு போதையில் டூவீலரில் சென்ற இருவர் மூடியிருந்த கேட்டை திறக்கும்படி வாக்குவாதம் செய்து அவரை தாக்கினர்.
ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் இதில் ஈடுபட்ட அப்பகுதி பாக்கியராஜை 24, கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மற்றொருவரை தேடி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.
''ரயில்வே கிராசிங் செயல்பாட்டில் குறுக்கிடுவது, கேட் கீப்பர்களிடம் தவறாக நடப்பது, ரயில் போக்குவரத்திற்கு இடையூறு செய்வது என ஈடுபடுவோருக்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்,'' என, போலீசார் எச்சரித்தனர்.

