ADDED : மே 27, 2025 02:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தொழில் நிறுவன உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டையில் உள்ள கும்மாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் நிறுவன உரிமையாளர் மகன் பிரகலாத் நரசிம்மன். 32 வயதான இவர், இன்று வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிரகலாத்தின் இந்த முடிவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.