போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை அடித்தவருக்கு கால் எலும்பு முறிவு
போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை அடித்தவருக்கு கால் எலும்பு முறிவு
ADDED : ஜன 12, 2025 08:30 PM

தேனி: தேனி மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை அடிக்க முயற்சித்த வாலிபர், கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேனி ஈஸ்வர் நகரில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது.
கொள்ளையர்களைப் பிடித்த போலீஸ்காரர் கடுமையாக தாக்கப்பட்டார்.
எனினும் போலீசார் சுற்றி வளைத்து நித்திஷ்குமார், 23, உதயகுமார், 24, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து கொள்ளையடித்த துப்பாக்கி, கஞ்சா, கஞ்சா ஆயில், மெத்தம்பட்டமைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் உடன் ஏற்பட்ட முதலில் கால் முறிவு ஏற்பட்டு நித்திஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உதயகுமார் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

