ADDED : ஏப் 08, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - மனோஜ் பாண்டியன்: தமிழகத்தில் சாமானிய மக்கள், அரசியல் அதிகாரம் பெற, திராவிட இயக்கங்கள் பெரும் பங்காற்றி உள்ளன. திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான சவுந்திர பாண்டியனார், நீதிக்கட்சி கொறடாவாக, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். சுயமரியாதை மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர். அவருக்கு மணி மண்டபம் இல்லை. அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மணி மண்டபம் அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: சவுந்திர பாண்டியனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.