ADDED : நவ 27, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு, மா.கம்யூ., மாநிலச் செயலர் சண்முகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் பண்டு நிதி நிறுவனம், 150 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதன் தலைமை இயக்குநர் தேவநாதன் யாதவ், கடந்த 2016ல் பொறுப்பேற்ற பின், 30,௦௦௦ போலி வர்த்தனைகள் வாயிலாக, நகைக் கடன் கொடுத்ததாக, போலி ஆவணங்கள் தயாரித்து, 450 கோடி ரூபாய் மோசடி செய்து, தன் குடும்பத்தினர் பெயரில் சொத்தாக மாற்றி உள்ளார்.
இது தொடர்பான வழக்கில், விரைவு நீதிமன்றம் அமைத்து, விசாரிக்க வேண்டும். நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்திருந்த, 6,௦௦௦க்கும் அதிகமான, மக்களின் பணத்தை பெற்றுத் தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

