sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு -26

/

மார்கழி வழிபாடு -26

மார்கழி வழிபாடு -26

மார்கழி வழிபாடு -26


ADDED : ஜன 09, 2025 06:49 PM

Google News

ADDED : ஜன 09, 2025 06:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 26


மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்

பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்ககாகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 6


பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்வணங்குகின்றார், அணங்கின் மணவாளாசெப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: பார்வதிதேவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்த பாசங்களை உதறி விட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர். கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.






      Dinamalar
      Follow us