sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார் கழி வழிபாடு -15

/

மார் கழி வழிபாடு -15

மார் கழி வழிபாடு -15

மார் கழி வழிபாடு -15


ADDED : டிச 29, 2024 06:33 PM

Google News

ADDED : டிச 29, 2024 06:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 15




எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்

பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்கு கிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.

உடனே தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் துாங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே,'' என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ''சரி..சரி... எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலி களாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.

''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். ''என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?'' என்கிறாள்.

தோழிகள் அவளிடம், ''நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்,'' என்கிறார்கள்.

திருவெம்பாவை - பாடல் 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்போரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி 'எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும்.

அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.






      Dinamalar
      Follow us