தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்


ADDED : நவ 21, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் – -: ‘‘தமிழகத்தில் விரைவில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,’’ என, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

துாத்துக்குடியில் இன்று (நவ.,21) அவர் அளித்த பேட்டி:

மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் சில திட்டங்கள் குறித்து முதல்வருடன் சமீபத்தில் கலைந்துரையாடினேன். அதில் முக்கியமானது, கடல் ஆம்புலன்ஸ் திட்டம். வரும் ஏப்ரலில் இருந்து இந்த திட்டத்தை தொடங்குவதற்கான பணிகளை செய்ய முடிவு செய்துள்ளோம். விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும்.

கடல் பகுதியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செய்யப்படுத்தப்பட உள்ளது. கடற்கரை பகுதியில் தேங்கிக் கிடக்கும் தொழிற்சாலை சாம்பல் கழிவுகளை அகற்றுவதற்கு ஆய்வு செய்து, தொழில்நுட்ப குழுவினருடன் ஆலோசனை செய்து வருகிறோம்.

மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான விபரங்கள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளதை தமிழில் மாற்ற பரிந்துரை செய்து, விரைவில் மாற்றுவோம். மீனவர்களுக்கு மழைக்கால நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக, பேரிடர் மேலாண்மை துறையிடம் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us