ADDED : பிப் 15, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடந்த லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்கள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இம்முறை தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க., விரும்புகிறது.
எனவே, வரும் லோக்சபா தேர்தலில், தங்கள் வேட்பாளருக்கு, பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி, ம.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் கடிதம் தரப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேற்று, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ள கடிதத்தின் நகலை வழங்கினார்.