ADDED : ஜூலை 27, 2025 06:54 AM

'கட்சிக்காக பாடுபட்ட மூத்தத் தலைவர்கள் இருக்க, தன் மகன் என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதியை, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஆக்கி இருக்கிறார்' என்றும், 'துரைமுருகன் போன்றோரை கேட்டுவிட்டு, அப்படியொரு முடிவெடுத்தாரா?' என்றும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். உடனே, 'துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி எழுப்ப பழனிசாமி யார்?' என, துரைமுருகன் கேட்டிருக்கிறார்.
தனக்காகத்தான், பழனிசாமி அப்படி கேள்வி எழுப்பினார் என்பதை புரிந்து கொள்ளக் கூட துரைமுருகனால் முடியவில்லை. 'அரண்மனையில் உத்தியோகம்; சத்திரத்தில் சாப்பாடு' என சொலவடை சொல்வார்கள். இப்படியொரு நிலைமையில் இருக்கும் துரைமுருகனுக்காக கேள்வி எழுப்புவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. இருந்தும் கேட்கிறோம், எல்லோருக்கும் எல்லாம் என்றால், உங்களுக்கு ஏன் இல்லை?
- இன்பதுரை, அ.தி.மு.க., - எம்.பி.,

