UPDATED : ஜூலை 19, 2025 07:22 PM
ADDED : ஜூலை 19, 2025 06:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இருந்து கர்நாடகாவின் ஷிவமோகாவுக்கு கிளம்பிய விமானத்தில் இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து கர்நாடகாவின் ஷிவமோகாவுக்கு 85 பயணிகள் உள்ளிட்ட 90 பேருடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு கிளம்பியது.
ஓடுபாதையில் கிளம்பிய உடனேயே, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து, அந்த விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.