ADDED : நவ 08, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் செய்தித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து, பத்திரிகையாளர்கள், செய்தி சேனல்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு, இன்று சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், காலை 8:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை, சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், முகாமை துவக்கி வைக்க உள்ளனர்.
ரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்தப் பரிசோதனை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண், பல், எலும்பியல், இதய மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

