ADDED : நவ 28, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மரபணு மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஆயுர்வேதம் ஆகிய துறைகளில், தலா ஒரு பேராசிரியர் பணியிடம்; பரிசோதனை மருத்துவம், தொற்று நோயியல், நோய் எதிர்ப்பியல், மரபணு மருத்துவம் துறைகளில், தலா ஒரு இணை பேராசிரியர் பணியிடம்; 21 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக, 65 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதி உடையோர், டிச., 13 க்குள் பல்கலை பதிவாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலை தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களை, https://tnmgrmu.ac.in இணையதளத்தில் அறியலாம்.

