ADDED : ஏப் 26, 2024 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வி கொள்கை குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் ஆதரவை பெறவும், மாணவ துாதர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து, பல்கலைகள், கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'சிறந்த கல்வி கற்றல், மாணவர்கள் மத்தியில் பழகும் திறன் மற்றும் தகவல் தொடர்பு ஏற்படுத்தும் திறன் மிகுந்த மாணவர்களை, மாணவ துாதராக நியமிக்க வேண்டும்.
'அவர்களின் வழியாக, புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து, மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

