UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:24 PM

தமிழக முதல்வர் விஜய்க்கு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வெள்ளி செங்கோல் வழங்குவது போன்ற உருவப்படத்தை, உலக அளவில் புகழ்பெற்ற காஞ்சி பட்டு நெசவாளர்கள், பட்டு சேலையில் தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
பெருந்துறை அரசு விழாவில், முதல்வர் விஜய்க்கு, இந்த சிறப்பு பரிசை, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
இதுகுறித்து,காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளியும், ஆடை வடிவமைப்பாளருமான குமரவேல் கூறியதாவது:
இந்த படைப்பு 3 அடி அகலமும், 4.5 அடி உயரமும் கொண்டது. ‘தக்காளி காஞ்சனா’ எனப்படும் கண்கவர் கருஞ்சிவப்பு நிற பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தகைய பிரம்மாண்ட பட்டு புகைப்படத்தை உருவாக்க, மூன்று திறமைமிக்க நெசவாளர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாது கைத்தறியில் நெய்து முடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
