கட்டப்பஞ்சாயத்து செய்யும் அமைச்சர் அ.ம.மு.க., தினகரன் ஆவேசம்
கட்டப்பஞ்சாயத்து செய்யும் அமைச்சர் அ.ம.மு.க., தினகரன் ஆவேசம்
UPDATED : நவ 20, 2026 09:40 PM
ADDED : நவ 20, 2026 09:40 PM
சென்னை: ‘பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவது தான், த.வெ.க., அரசின் கொள்கையா’ என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரையில், காவலரின் மனைவிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, டாக்டர் மீது புகார் அளிக்க, அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்றுள்ளனர். ஆனால், அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் புகாரை பெற, போலீசார் மறுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி உள்ளனர்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் என, நிர்மல்குமாரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளும் சீரழிந்து கொண்டிருக்கிறது. அவற்றை சீரமைக்க வேண்டிய அமைச்சர், காவல் நிலையத்திற்குள்ளேயே கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவது தான், த.வெ.க., அரசின் கொள்கையா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
