sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேட்டூர் அணையில் குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது அமைச்சர் துரைமுருகன் பதில்

/

மேட்டூர் அணையில் குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது அமைச்சர் துரைமுருகன் பதில்

மேட்டூர் அணையில் குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது அமைச்சர் துரைமுருகன் பதில்

மேட்டூர் அணையில் குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது அமைச்சர் துரைமுருகன் பதில்


ADDED : பிப் 14, 2024 01:20 AM

Google News

ADDED : பிப் 14, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மேட்டூர் அணையில், குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாயை சீரமைக்க, அ.தி.மு.க., ஆட்சியில், 40.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 26 கி.மீ., பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரும் போது, அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது; அதை சீர் செய்ய வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: ஈரோடு மாவட்டம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய் பணிகள் பாதி முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள பணி, நிதி இருக்கும் போது எடுத்து கொள்ளப்படும். உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கோட்டையன்: அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில், 90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது பணி முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சில ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்வதுடன், விடுபட்ட பகுதிகளை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: பணிகள் முடிந்து விட்டன. ஒரு சில இடங்களில் குழாய் புதைக்கும் பணி நடக்கிறது. அப்பணியை முடித்து, விரைவில் துவக்க விழா நடக்கும்.

தி.மு.க., - சுந்தர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏரிகள், கால்வாய்கள், மதகுகள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: நீங்கள் கூறியது உண்மை தான். பல ஆண்டுகளாக அவை சீரமைக்கப்படவில்லை. இந்த ஆண்டில் பழுதடைந்த ஏரிகள், கால்வாய்களை கணக்கெடுத்து, நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும்.

அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன்: நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்தில், 1.51 லட்சம் ஏக்கர் பயிர்கள், மார்ச் மாதம் அறுவடைக்கு வரும். இம்மாதம் முழுதும் பயிருக்கு தண்ணீர் தேவை. தற்போது 2 டி.எம்.சி., தண்ணீர் விட்டுள்ளீர்கள். மேலும் 2 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: தற்போதுள்ள நிலையில், மேட்டூரில் குடிநீருக்கு தான் தண்ணீர் உள்ளது. எனினும், 3 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட்டுள்ளோம். மழை வந்தால் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us