காலாவதி இருமல் மருந்து விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டதால் பாதிப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
காலாவதி இருமல் மருந்து விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டதால் பாதிப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
ADDED : அக் 06, 2025 02:16 AM

சைதாப்பேட்டை: ''ம. பி., மாநிலத்தில் காலாவதி இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து, தமிழக சுகாதாரத்துறை துரிதமாக செயல்பட்டதால், இங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,'' என, மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் கூறியதாவது:
ம த்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு, அக்., 1ம் தேதி அவசர கடிதம் வந்தது. அதில், ம.பி., மாநிலத்தில் குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக கருதப்படும் காலாவதியான மருந்து, பெங்களூரு மற்றும் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது.
அன்றைய தினமே, முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், மருந்துகள் விதி 1945 கீழ் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே, சர்ச்சைக் குரிய, 'கோல் ட்ரிப்' இருமல் மருந்து உள்ளிட்ட ஐந்து மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அ தன் முடிவில், 'டைஎத்திலீன் கிளைகோன்' என்ற உயிர்கொல்லி நச்சு வேதிப்பொருள், 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, துணை மருத்துவ கட்டுப்பாடு இயக்குநர் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் இந்த மருந்து தடை செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில் லை. தமிழகத்தில் இருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த மருந்து வினி யோகம் செய்யப்படுகிறது என்பதால், அம்மாநிலங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, 'ஸரேசன்' மருந்து நிறுவனத்திற்கு, மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த, கடந்த 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம.பி.,யிடம் இருந்து தகவல் பெற்ற, 48 மணி நேரத்தில், தமி ழக மருந்து கட்டுப்பா டு துறை துரிதமான நடவடிக்கை மேற்கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.