அ.தி.மு.க., போராட்டம் தேவைற்றது அமைச்சர்கள் கண்டனம்
அ.தி.மு.க., போராட்டம் தேவைற்றது அமைச்சர்கள் கண்டனம்
ADDED : ஜூன் 19, 2025 12:32 AM
சென்னை:'மாம்பழ சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு தீர்வு கண்டபின், போராட்டம் நடத்துவது தேவைற்ற ஒன்று' என, அ,தி.மு.க.,வுக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: மாம்பழம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி, மாம்பழம் பதப்படுத்தும் நிறுவனங்கள், மாம்பழக் கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.
மாம்பழம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இப்பிரச்னையை பெரிதாக்கி, அரசியல் செய்ய முயற்சித்த எதிர்க்கட்சிகள், அரசின் முயற்சியால் விவசாயிகள் மாம்பழம் விற்பனை செய்வதை பொறுக்க முடியாமல், போராட்டம் நடத்துவதாக கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று.
அமைச்சர் சக்கரபாணி: மாம்பழ சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்தில் தலையிட்டு, அரசு நடவடிக்கை எடுத்து விட்டது.
அதன்பின் தன் இருப்பை காட்டிக்கொள்ள போராட்டம் அறிவித்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் பழனிசாமி.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மாம்பழ விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரி, நத்தம் ஆகிய இடங்களில் நாளை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'மாம்பழ சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு தீர்வு கண்டபின், போராட்டம் நடத்துவது தேவைற்ற ஒன்று' என, தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: மாம்பழம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி, மாம்பழம் பதப்படுத்தும் நிறுவனங்கள், மாம்பழக் கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
மாம்பழம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இப்பிரச்னையை பெரிதாக்கி, அரசியல் செய்ய முயற்சித்த எதிர்க்கட்சிகள், அரசின் முயற்சியால் விவசாயிகள் மாம்பழம் விற்பனை செய்வதை பொறுக்க முடியாமல், போராட்டம் நடத்துவதாக கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று.
அமைச்சர் சக்கரபாணி: மாம்பழ சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்தில் தலையிட்டு, அரசு நடவடிக்கை எடுத்து விட்டது.அதன்பின் தன் இருப்பை காட்டிக்கொள்ள போராட்டம் அறிவித்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் பழனிசாமி.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

