தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா நோட்டீஸ்: மலை பிரச்னையில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு

மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா நோட்டீஸ்: மலை பிரச்னையில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு

மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா நோட்டீஸ்: மலை பிரச்னையில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு


ADDED : பிப் 10, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : 'திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தி அறிக்கை வெளியிட்டதாகக்கூறி, மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக' திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை பிரச்னையில் மதுரை கலெக்டர் பிப்., 5ல் ஒரு விளக்க அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் ஜன., 30ல் நடந்த அமைதி கூட்டத்தில் அ.தி.மு.க., பிரதிநிதி கலந்து கொண்டதாகவும், அந்தப் பிரதிநிதி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களில் கையெழுத்திட மறுத்து, வெளியே சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கலெக்டர் அந்த அறிக்கையில் அ.தி.மு.க.,வை குறிப்பிட்டே கூறியுள்ளார்.

அறிவுரை


அ.தி.மு.க., ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். பொது அமைதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., என்றென்றும் உடன் நிற்கும் என்பது நாடறிந்த ஒன்று.

இது போன்ற சூழ்நிலைகளில் சரியான முடிவு எடுத்து, அமைதிக்கு களங்கம் ஏற்படாத வகையில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.

கலெக்டர் குறிப்பிட்டுள்ள அமைதி கூட்ட பேச்சுவார்த்தைக்கு, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் மாவட்டச் செயலரும், மாநில அமைப்புச் செயலராகவும் உள்ள எனக்கு அழைப்பு இல்லை.

எங்களது நிர்வாகிகளுக்கும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார் ஆகியோருக்கும் கலெக்டர் சார்பில் அழைப்பு இல்லை. அழைப்பு இல்லாத கூட்டத்தில், நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்?

ஆனால், அந்த அமைதி கூட்டத்தில் எங்கள் கட்சி பிரதிநிதி கலந்து கொண்டதாகவும், அதில் எங்கள் பிரதிநிதி கையெழுத்திட மறுத்ததாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தும் வகையில், அரசின் அங்கமாக இருக்கும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தன் தவறை உணர்ந்து, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என நானும், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோர் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

ஆனால், கலெக்டர் எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. இதுவரை வருத்தமும் தெரிவிக்கவில்லை. மாற்றுச் செய்தியும் வெளியிடவில்லை.

அதனால், கலெக்டர் மீது சட்டப்படி வழக்கு தொடுக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் அனுமதி பெற்று, என் சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, அ.தி.மு.க., வழக்கறிஞர் குழு பிப்., 7ல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கலெக்டர் தவறாக தகவல் தெரிவித்ததற்கு, உடனடியாக அ.தி.மு.க.,விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன கருத்து கூறுகிறதோ, மரபுகளை சொல்லி இருக்கிறதோ, அதை ஆராய்ந்து முடிவு எடுப்போம்.

குறுக்கிடக்கூடாது


எங்களால் பொது அமைதிக்கான ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். அரசு, மாவட்ட நிர்வாகத்துக்கு தான் நிர்வாக ரீதியாக சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.

திருப்பரங்குன்றம் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும். அவரவர் மதத்தை அவரவர் வணங்க வேண்டும். மற்றவர் மதத்தில் அடுத்தவர் குறுக்கிடக் கூடாது. திருப்பரங்குன்றத்தில் நல்ல சூழ்நிலை உருவாக அ.தி.மு.க., என்றைக்கும் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us