எம்.எல்.ஏ., வீட்டு பணிப்பெண் தீக்காயமடைந்ததில் இறப்பு
எம்.எல்.ஏ., வீட்டு பணிப்பெண் தீக்காயமடைந்ததில் இறப்பு
ADDED : நவ 20, 2025 02:17 AM
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, பா.ஜ.,- - எம்.எல்.ஏ., வீட்டில் வேலை செய்து வந்த வயதான பெண், தீக்காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், ஜெய் துர்கை நகரை சேர்ந்த மாரப்பன் மனைவி சரோஜா, 73; கணவரை இழந்த இவருக்கு குழந்தைகள் இல்லை. தனியே வசித்து வந்தார்.
இவர், கடந்த, 50 ஆண்டுகளாக, ஈரோடு பெரியார் நகரில் உள்ள, மொடக்குறிச்சி, பா.ஜ., -- எம்.எல்.ஏ., சரஸ்வதி வீட்டில் தங்கி வேலை செய்தார்.
கடந்த அக்., 1ல், எம்.எல்.ஏ., சரஸ்வதி வீட்டில் ஆயுத பூஜையன்று, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கில், சரோஜா சேலையின் முந்தானையில் தீப்பற்றி, உடலில் பரவியது.
இதில், படுகாயமடைந்த அவரை, ஈரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 17ல் சரோஜா உயிரிழந்தார்.
சரோஜாவின் வளர்ப்பு மகள் மரகதம் புகாரில், ஈரோடு டவுன் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

