ADDED : டிச 09, 2025 07:39 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், வரும் 14ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் நாலு முக்கு, காக்காச்சி, மாஞ் சோலை பகுதிகளில், தலா, 7 செ.மீ.,; ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், 4 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றில், வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், வரும் 14ம் தேதி வரை, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

