துணை முதல்வர் உதவியாளர் என கூறி நகராட்சி கமிஷனரிடம் பணம் பறிப்பு
துணை முதல்வர் உதவியாளர் என கூறி நகராட்சி கமிஷனரிடம் பணம் பறிப்பு
ADDED : டிச 07, 2024 01:52 AM
திருவாரூர்: திருவாரூர் நகராட்சி கமிஷனராக இருப்பவர் தாமோதரன். கடந்த, 4ம் தேதி, இவரது மொபைல் போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசியவர், தன்னை தமிழக துணை முதல்வரின் நேர்முக உதவியாளர் என்று அறிமுகம் செய்தார்.
பின் அவர், 'திருவாரூர் வந்து விட்டு, சென்னை திரும்பும் போது, கார் பழுதாகி நின்று விட்டது.
ரூ.5,000
அதை சரி செய்ய, 'கூகுள் பே' வாயிலாக, 5,000 ரூபாய் அனுப்புங்கள்' என கூறினார்.
அதை நம்பிய கமிஷனர், அந்த நபர் கேட்டபடி, 5,000 ரூபாய் அனுப்பினார். சில மணி நேரம் கழித்து மீண்டும், 2,500 ரூபாய் அனுப்பும்படி அந்த நபர் கேட்டார். அதன்படி, 2,500 ரூபாயை நகராட்சி கமிஷனர் அனுப்பினார்.
போலீசில் புகார்
மொத்தம், 7,500 ரூபாயை பெற்றுக்கொண்ட அந்த நபர், மீண்டும் 2,500 ரூபாய் அனுப்புங்கள்; சென்னை சென்றவுடன், 10,000 ரூபாயாக அனுப்பி விடுகிறேன் என்றார்.
சுதாரித்த கமிஷனர், பணத்தை அனுப்பாமல் திருவாரூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை யில், அந்த நபர் துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த, சரவணக்குமார், 31, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.