உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 04, 2026 01:47 PM
அ நிறம் | அளவு
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்வராயன்மலையில் நேற்று அதிகாலை, 2:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை கனமழை பெய்தது.
தொடர்ந்து சாரல் மழையாக பெய்தது. இதனால் முட்டலில் உள்ள ஆணைவாரி நீர்வீச்சிக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் பாதுகாப்பான முறையில் குளிக்க, வனத்துறையினர் அறிவுறுத்தினர். தொடர்ந்து வனத்துறையினர், நீர்வீழ்ச்சி, வழிப்பாதை ஓடை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
