கடந்த ஆண்டை காட்டிலும் போதைப்பொருள் பறிமுதல் அதிகம் அதிகாரிகள் தகவல்
கடந்த ஆண்டை காட்டிலும் போதைப்பொருள் பறிமுதல் அதிகம் அதிகாரிகள் தகவல்
ADDED : நவ 27, 2025 02:13 AM
சென்னை: கடந்த ஆண்டை விட, தற்போது போதைப் பொருள் பறிமுதல் அதிகரித்து உள்ளதாக, என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
போதை பொருட்களான கஞ்சா, 'மெத் ஆம்பெட்டமைன், கோகைன், எபிட்ரீன்' ஆகியவற்றுக்கு, ரகசிய பெயர் வைத்து, சர்வதேச கும்பல்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன. கடத்தல்காரர்களின் தொடர்பு சங்கிலியை கண்டறிவது சவாலானது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் ரீதியான புலனாய்வு மற்றும் உளவு தகவல்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 21 பேர் உட்பட, 116 கடத்தல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து, கடந்த ஆண்டில், 1,582 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில், 2,328 கிலோவாக அதிகரித்து உள்ளது.
ஹாசிஷ் எனும் கஞ்சா ஆயில், கடந்த ஆண்டு, 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் தற்போது வரை, 16 கிலோ பறிமுதல் செய்துள்ளோம்.
ஒட்டுமொத்தமாக, கோகைன், மெத் ஆம்பெட்டமைன், சூடோஎபிட்ரின் உள்ளிட்ட சிந்தட்டிக் போதைப் பொருட்கள் பறிமுதல் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த ஆண்டில், 1,607 கிலோ என்ற நிலையில் இருந்து, நடப்பு ஆண்டில் 2,360 கிலோவாக அதிகரித்துள்ளது தெரியவந்துஉள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

