ADDED : மார் 04, 2025 04:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்லில் தாய், மகன், மகள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பதிநகரில் வசிப்பவர் பிரேம்ராஜ். தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனபிரியா(33), பிரினிராஜ்(11), மகள் பிரினித்தி(13) ஆகியோரின் சடலம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
பிரேம்ராஜ், கடந்த 10 நாளில் ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபடும்போது, மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என போலீசார் கூறுகின்றனர்.