தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சிகளுக்கு உத்தரவு

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சிகளுக்கு உத்தரவு

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சிகளுக்கு உத்தரவு


UPDATED : நவ 21, 2026 05:34 PM

ADDED : நவ 21, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:34 PM ADDED : நவ 21, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், கட்டுமானங்களை ஆய்வு செய்து, விதி மீறல் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல்களை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விபரங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கட்டட வரைபட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள அனைத்து வளாகங்களிலும், சம்பந்தப்பட்ட கள மற்றும் பகுதி அலுவலர்கள், கட்டாயமாக மாதந்திர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திலிருந்து, ஏதேனும் விதிமீறல் அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் கவனிக்கப்பட்டால், எவ்வித தாமதமுமின்றி, உடனே நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, 2022ல் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்ட நடைமுறைகள், கடந்த 2023ல் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். விதிமீறல், அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், தங்கள் அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்க்க வேண்டும். அத்துடன், கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். வரைபட ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட தளங்களின் எண்ணிக்கை, பராமரிக்கப்பட்ட பதிவேடுகள், சட்ட விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள் ஆகியவற்றின் விபரங்களை, ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை அமல்படுத்த தவறினால், சம்மந்தப்பட்ட கமிஷனர்கள், கள ஆய்வுப் பணியாளர்கள், உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமைக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us