தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சேதுராமன் சாத்தப்பன்

சேதுராமன் சாத்தப்பன்

சேதுராமன் சாத்தப்பன்


UPDATED : நவ 21, 2026 05:34 PM

ADDED : நவ 21, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:34 PM ADDED : நவ 21, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்ணுக்கு தெரியாத அலைகள்...

சிக்கப்போகும் கப்பல்களின் ரகசியங்கள்!

– சேதுராமன் சாத்தப்பன் –

விண்வெளி தொழில்நுட்பம் என்றாலே செயற்கைக்கோள்கள் மூலம் பூமியைப் படம் பிடிப்பது, வானிலை மாற்றத்தை கண்காணிப்பது, தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவது போன்றவையே நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு மாறாக பூமியிலிருந்து வெளிப்படும் கண்ணுக்கு தெரியாத ரேடியோ அலைகளை கண்டறிந்து, அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பெங்களூருவைச் சேர்ந்த ULOOK Technologies என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

கப்பல், விமானம், ராணுவ ரேடார்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தொடர்ந்து ரேடியோ அலைவரிசை (RF) சிக்னல்களை வெளியிடுகின்றன. இந்தச் சிக்னல்களை ஆய்வு செய்வதால், அவற்றின் இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும்.

பொதுவாக கப்பல்களைக் கண்காணிக்க AIS என்ற தானியங்கி அடையாள அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில கப்பல்கள் தங்களது அடையாளத்தை மறைக்க இந்த அமைப்பை அணைத்து விடுகின்றன. இத்தகைய கப்பல்களையும் விண்வெளியிலிருந்து ரேடியோ சிக்னல்கள் மூலம் கண்டறிவதே ULOOK நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.

செயற்கை கோள்களின்

கூட்டமைப்பு

கடந்த, 2024ல் பெங்களூருவில் துவக்கப்பட்ட ULOOK நிறுவனத்தை சித்தேஷ் ரவீந்திர நாயக் மற்றும் அதீஷ் போரட்கர் ஆகியோர் நிறுவியுள்ளனர். பல சிறிய செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்து ஒரே குழுவாகச் செயல்படுத்தும் Satellite Swarm Technology என்ற முறையை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. செயற்கைக்கோள்கள் பெறும் ரேடியோ சிக்னல்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவுப் பகுப்பாய்வு வாயிலாக வகைப்படுத்தி, அவற்றின் மூலத்தையும் இருப்பிடத்தையும் கண்டறிவதே இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம்.

இந்த தொழில்நுட்பம், AIS கருவிகளை அணைத்து விட்ட கப்பல்கள் மற்றும் Shadow Fleet எனப்படும் மறைமுகக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணித்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டறிதல், விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் ரேடியோ சிக்னலை கண்காணித்தல், GPS சிக்னல் இடையூறுகள் மற்றும் தகவல் தொடர்பு மாற்றங்களை கண்டறிதல், இயற்கைப் பேரிடர்களின்போது அவசர உதவிக்கான சிக்னல்களைக் கண்டறிதல், முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது.

விண்வெளித் துறையில்

புதிய வாய்ப்பு

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 2033ம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ULOOK போன்ற ஆழமான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதுவரை விண்வெளியிலிருந்து பூமியைப் படம்பிடித்துக் கண்காணித்து வந்தோம். இனி பூமியிலிருந்து வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத ரேடியோ அலைகளைக் கண்டறிந்து, மறைந்திருக்கும் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு: https://ulook.space

சந்தேகங்களுக்கு: இ–மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன்: 98204 – 51259, இணையதளம்: www.startupandbusinessnews.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us