தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கொலை வழக்கு ரவுடிகள் இடையே தகராறு பீர்பாட்டிலால் தாக்கிய ரவுடி கைது

கொலை வழக்கு ரவுடிகள் இடையே தகராறு பீர்பாட்டிலால் தாக்கிய ரவுடி கைது

கொலை வழக்கு ரவுடிகள் இடையே தகராறு பீர்பாட்டிலால் தாக்கிய ரவுடி கைது


UPDATED : நவ 16, 2026 05:57 PM

ADDED : நவ 16, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:57 PM ADDED : நவ 16, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூரில், கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ரவுடிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பீர்பாட்டிலால் தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பார்வதி நகரை சேர்ந்தவர் அல்லாபகாஷ், 33; வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்கிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தபரேஸ்கான், 34, என்பவரும் நண்பர்கள்.

இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன், ஹட்கோ ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த, 20 நாட்களுக்கு முன், ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும், ஹட்கோ ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.

கடந்த, 14ம் தேதி கையெழுத்திட்ட இருவரும், ஓசூர் சீத்தாராம்மேடு உருது பள்ளி பின்புறம் இரவு, 7:30 மணிக்கு ஒன்றாக மது அருந்தினர். அப்போது, தபரேஸ்கான் சிகரெட் வாங்க, அல்லாபகாஷிடம், 200 ரூபாய் கேட்டார்.

அதற்கு அவர் பணம் கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தபரேஸ்கான், பீர்பாட்டிலால் அல்லாபகாஷை தாக்கினார். இதில் தலை, கை, முதுகில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, தபரேஸ்கானை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us