தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் முருக பக்தர்கள்

இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் முருக பக்தர்கள்

இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் முருக பக்தர்கள்


UPDATED : அக் 09, 2026 05:56 PM

ADDED : அக் 09, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 05:56 PM ADDED : அக் 09, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால், திருச்செந்துார் வரும் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துார் வருவதால், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இரவு நேரத்தில் திருச்செந்துாரில் இருந்து துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் கூறியதாவது:

திருச்செந்துார் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல, மூன்று ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இரவு, 8:00 மணிக்கு மேல், ரயில் போக்குவரத்து கிடையாது என்பதால், பஸ்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

ஆனால் இரவு, 7:00 மணிக்கு மேல் திருச்செந்துாரில் இருந்து வெளியூர் செல்ல போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. மதுரை, திருச்சி செல்லும் பஸ்களில் துாத்துக்குடி செல்வதற்கு கூட ஏற்றுவது கிடையாது. கூட்டம் அதிகம் இல்லை என்றால் மட்டும் ஏற்றுகின்றனர்.

பஸ்களில் இடம்பிடிப்பதற்காக முட்டி மோதுவதால், பக்தர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. கோவில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் நிலையில், திருச்செந்துாரில் இருந்து துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

பஸ் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, போக்குவரத்துத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us