சென்னை அப்போலோ மருத்துவமனையில் 'எனது உணவு எனது ஆரோக்கியம்' நுால் வெளியீடு
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 'எனது உணவு எனது ஆரோக்கியம்' நுால் வெளியீடு
ADDED : ஜூலை 11, 2025 05:24 AM

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை எனது உணவு, எனது ஆரோக்கியம் என்ற பொருளை மையப்படுத்தி, நுாலை வெளியிட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில், நுால் வெளியிட்டு விழா நடந்தது. வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் ஆதாரங்களின் அடிப்படையில் ஊட்டச்சத்து மூலம் எதிர்த்து போராடும் நோக்கில் இந்த நுாலை வெளியிட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக சுசரிதா ரெட்டி பங்கேற்று நுாலை வெளியிட்டார். அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டி தலைமை தாங்கினார். பின்னர் அவர், மை புட், மை ஹெல்த் என்ற நுாலை வெளியிடுவதன் மூலம், நோய் தடுப்பு, சுகாதார சேவையை அனைவருக்கும் கிடைக்கும். தொற்று அல்லாத நோய்கள் அனைத்து வயதினரின் வாழ்க்கையை பாதித்து வருகிறது. ஆரோக்கியம் குறித்து, மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.
இவரை தொடர்ந்து, மருத்துவமனை உணவுமுறை ஆலோசகர் அனிதா கூறுகையில், இந்த நுால் மூலம், நாம் உணவை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும். இந்த நுால், மருத்துவ அனுபவத்தாலும், உணவியல் நிபுணர்களின் உதவியோடு வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து நிபுணர்கள், டாப்னி டி.கே., பிரியங்கா ரோஹத்கி ஹரிதா ஷியாம், லேகா, பபிதா ஹசாரிகா, சம்பா மஜூம்தார், வர்ஷா கோரே, சந்தியா சிங், சுனிதா சாஹூ உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.