தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்


ADDED : நவ 01, 2026 04:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 04:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜவினர் மரியாதை செலுத்தச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய தவெக அரசின் ஏவல்துறை, அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்திருப்பது அராஜகம்.

தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு அனைத்து இடங்களிலும் முழு சுதந்திரம் கொடுத்து விட்டு, மற்ற கட்சிக்காரர்கள் மீது இப்படி அநியாயமாக அடக்குமுறையை ஏவுவது தான் தவெகவின் மாற்று அரசியலா?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையை, தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தீர்க்கும் 'கைக்கூலிகள்' போல பயன்படுத்திக் கொள்ளும் சர்வாதிகார மனப்போக்கில் இருந்து முதல்வர் விஜய் முதலில் வெளியில் வர வேண்டும்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் பொது இடங்களில் மரியாதையுடன் நடத்த வேண்டும். பாஜ நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!. இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us