உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 25, 2026 03:14 AM

அ நிறம் | அளவு
நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் 'நீட்' தேர்வை திரும்ப பெறுமாறு, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அமைந்துள்ள, த.வெ.க., அரசும், கொள்கை ரீதியாக, 'நீட்' தேர்வு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது.
டில்லியில், மாணவர்கள் நடத்தும் போராட் டத்திற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஐந்து எம்.பி.,க்களும், நேரில் சென்று ஆதரவளித்தனர். பின்தங்கிய பகுதி மாணவர்களின், மருத்துவ படிப்புக்கு தடையாக இருக்கும் 'நீட்' தேர்வை, மத்திய அரசு முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்க வேண்டும்.
- ஷாஜகான்
தமிழக அமைச்சர், முஸ்லிம் லீக் கட்சி
